காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினர் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் கோழி இறைச்சியை வெளிப்புறம் வைத்து சூடேற்றி தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கின்றன. கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் 11 கடைகளில் ஆய்வு செய்தனர்.
அதில் சுத்தமில்லாமல் செயல்பட்டுவரும் 10 கடைகளுக்கு ரூ இரண்டாயிரம் வீதம் ரூ 20,000 அபராதம் விதித்தனர். மேலும் புத்தேரி தெரு பகுதியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த ஷவர்மா கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் ஆய்வு செய்த 10 ஷவர்மா கடைகளில் இருந்து கோழி இறைச்சியை எடுத்து சோதனை செய்ய கிண்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த சோதனை முடிவு வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறினார்.