உலங்கு வானூர்தி (helicopter) என்பது வானூர்தி வகைகளில் ஒன்று. விமானத்திற்கும் உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் விமானம் மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
அப்படி ஹெலிகாப்டருக்கு கீழேயுள்ள ஸ்டாண்ட் மட்டும் சக்கரங்களை பார்த்துள்ளீர்களா? இது எதற்காக இந்த ஹெலிகாப்டரில் வைத்துள்ளார்கள் என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? ஹெலிகாப்டர் ஸ்டாண்ட் skids என்று கூறுவார்கள். ஏன் எல்லா ஹெலிகாப்டர்களிலும் இந்த skids என்று அழைக்கப்படும் ஸ்டாண்ட் உள்ளது என்றால் சிறிய ரக ஹெலிகாப்டர்களில் இந்த ஸ்டாண்ட் இருந்தால்தான் இதனை பாதுகாப்பான முறையில் தரையிறக்க முடியும். ஆனால் பெரிய ஹெலிகாப்டர்களில் இந்த ஸ்டாண்ட் மற்றும் சக்கரங்கள் இரண்டுமே இருக்கும். ஏனெனில் பெரிய ஹெலிகாப்டர்கள் எடை மிகவும் அதிகமாக இருக்கும்.
தரை இறக்கும் பொழுது skids என்று அழைக்கப்படும் ஸ்டாண்ட் உடைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்புக்காக சக்கரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது காரணம் சிறிய ஹெலிகாப்டர்கள் எடை மிகவும் குறைவாக இருக்கும். இதில் குறைந்த அளவு விசையை பயன்படுத்தி மேலே எழும்பி பறந்திட முடியும். ஆனால் பெரிய ஹெலிகாப்டர்கள் சற்று எடை அதிகமாக இருப்பதால் இதனால் சிறிய ரக ஹெலிகாப்டர்களைப் போன்று விரைவில் பறக்க முடியாது. அதன் காரணமாகத்தான் ஹெலிகாப்டர்களில் சக்கரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி விமானங்கள் போன்றே சிறிது நேரம் தரையில் சென்றபின்னர் வானத்தில் பறப்பதற்கு ஏதுவாக இருக்கும்.