சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான புதிய கேஸ் சிலிண்டரின் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹268.50 உயர்ந்து ₹2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
எனவே இந்த விலை உயர்வால், ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வால் மீண்டும் தமிழகத்தில் உணவுகள், டீ, காபி விலை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 இட்லி 35 ரூபாய் எனவும் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி 28 முதல் 30 ரூபாய் மற்றும் பூரி, பொங்கல், தோசை, கிச்சடி உட்பட அனைத்து வகை உணவுகளும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் மதிய சாப்பாடு ரூ.120 இல் இருந்து ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.