Categories
பல்சுவை

சிங்கமும், புலியும் சண்டை போட்டால்…. எது ஜெயிக்கும் தெரியுமா….? வாங்க பார்க்கலாம்….!!

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.

காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி, சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத்தான் வாழும். ஆனால் புலி தனிமையில் வாழும். அதாவது புலிகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மற்றொரு புலியுடன் சேர்ந்து இருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாக புலிகள் காட்டின் உட்பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால் சிங்கக் கூட்டங்களை காட்டுப்பகுதி, சமவெளிப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் பார்க்க முடியும். ஒரு புலியின் சராசரி எடை 325 கிலோவாகும். ஒரு சிங்கத்தின் சராசரி எடை 225 கிலோ ஆகும். இந்நிலையில் புலியை விட சிங்கங்கள் எடை குறைவாக இருப்பினும் சிங்கங்கள் தான் மிகவும் வேகமாக செயல்படும். உதாரணமாக ஒரு புலி மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் சிங்கங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதனையடுத்து புலிகள் எப்போதும் தன்னுடைய உணவை தனியாக நின்று வேட்டையாடும். ஆனால் சிங்கங்கள் தன்னுடையை கூட்டமாகத்தான் வேட்டையாடும்.

அதன்பிறகு சிங்கங்கள் எப்போதும் தனக்கு பசிக்க கூடிய நேரத்தில் மட்டுமே வேட்டையாடும். ஆனால் புலி தன்னுடைய இறையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வேறு ஏதாவது விலங்கு வந்தால் உடனே அந்த விலங்கை வேட்டையாட ஆரம்பித்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் சிங்கத்தை விட புலிகள் கொடூரமானவை மற்றும் சக்தி வாய்ந்தவை ஆகும். பண்டைய ரோம் நாட்டில் சிங்கம் மற்றும் புலியை சண்டை போட வைத்துள்ளனர். அந்த சண்டையில் புலியே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் சிங்கமும், புலியும் வெவ்வேறு காலநிலையில் வசிப்பதால் அவைகள் சண்டையிட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அதை மீறியும் ஒருவேளை சிங்கமும், புலியும் சண்டை போட்டால் புலி தான் வெற்றி பெறும். இருப்பினும் சண்டை சிங்கங்கள் வசிக்கும் இடத்தில் நடைபெற்றால் சிங்கமும் தன்னுடைய மானம் காப்பதற்காக கடுமையாக போராடி வெற்றி பெறுவதற்கான‌ வாய்ப்புகளும் இருக்கிறது.

Categories

Tech |