பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி குளக்காரன் தெருவில் ஆனந்தன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெண்மணி(26) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். அதன் பிறகு பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து இருவரும் திருமண வயதை கடந்து விட்டதால் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.