Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான நிலையில் இருக்கும் பாலம்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியிலிருந்து நாலாநல்லூர் பகுதிக்கு செல்ல முள்ளியாற்றின் குறுக்கே மரப்பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என அனைவரும் இந்த பாலத்தை  கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இருசக்கர வாகனம், மற்ற வாகனத்தில் செல்பவர்கள் வேறு மாற்றுப்பாதையில் தான் செல்ல வேண்டும். எனவே இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |