பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
பிரபல தொழிலதிபரும் மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தொழில் சம்பந்தமாகவும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா தொழில் முனைதல் பற்றி தனக்கு கற்றுக் கொடுத்த ஒரு விஷயத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி மதத்தில் இருந்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரினால் பொருளாதாரம், தொழில், வர்த்தகம், பணவீக்கம் என பலவற்றிலும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 10 ஆயிரத்து 455 தொழில் முனைவோர்கள் உருவாகியதாகவும், 1200 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இப்படிப்பட்ட நெருக்கடி காலத்திலும் இவ்வளவு நம்பிக்கை இருப்பதை நம்ப முடியவில்லை. தொழில் தொடங்குவது பணம் சம்பாதிப்பது மட்டும் கிடையாது. இது வாழ்க்கையை பாசிட்டிவாக மாற்றுவதை குறிக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.