Categories
பல்சுவை

“ஈபிள் டவர்” அடடே! இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதா….? இதுபற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்….!!

பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் அமைந்துள்ளது. இந்த ஈபில் டவர் கட்டும் பணிகள் கடந்த 1887-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1889-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த டவர் 1889-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பார்வையாளர்களின் வசதிக்காக திறக்கப்பட்டது. சுமார் 10,000 டன் எடை கொண்ட ஈபில் டவர் 324 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். இது கஸ்ரேல் ஈபில் என்பவரால் கட்டப்பட்டதால் ஈபில் டவர் என அழைக்கப்படுகிறது.

இந்த ஈபிள் டவரை பார்ப்பதற்காக ஒரு வருடத்திற்கு 70 லட்சம் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இந்த ஈபிள் டவர் உலக வர்த்தக மாநாட்டின் நுழைவு வாயிலாக கட்டப்பட்டது. இந்த ஈபிள் டவருக்கு 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை 60 டன் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. இந்த ஈபில் டவரில் மொத்தம் 3 தளங்கள் அமைந்துள்ளது. இந்த டவரில் சிறிய கடைகள், ஒரு ரெஸ்டாரன்ட், ஒரு தியேட்டர் உள்ளது. இந்த ஈபில் டவரின் மேல் தளத்திற்கு செல்வதற்கு மொத்தம் 1,665 படிக்கட்டுகளும், லிப்ட் வசதியும் உள்ளது.

Categories

Tech |