உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டிற்கு என தனித்தனி சிறப்பு இருக்கும். அந்நாட்டின் நடைமுறைகளும் வித்தியாசமாக இருக்கும். அப்படிதான் ஜப்பானில் பல வித்தியாசமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. பொதுவாக ஜப்பானில் நேரம் என்பது மிகவும் முக்கியம். அங்கிருக்கும் அனைவரும் நேரத்தை மிகவும் மதிப்பு மிக்கதாக கருதுகின்றனர். குறிப்பாக ஜப்பானில் ஓடும் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரும். ஒருவேளை 2 அல்லது 3 நிமிடங்கள் தாமதமாக வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?.
அப்படி ரயில் தாமதமாக வந்தால், ரயிலில் இருக்கும் அதிகாரிகள் ஒவ்வொரு பயணிகளிடமும் சென்று ரயில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்பார்கள். அதுமட்டுமல்லாமல் ரயில் எவ்வளவு தாமதமாக வந்தது என்று ஒரு சீட்டு அச்சிடப்பட்டு வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு தாமத சான்றிதழ் வழங்கப்படும். அலுவலகத்திற்கு அல்லது கல்லூரிக்கு தாமதமாக செல்லும் போது அந்த சான்றிதழ்களை அவர்கள் காண்பித்து கொள்ளலாம். எனவே நேரம் என்பது மனிதனின் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை இதன் மூலமாக நாம் உணரலாம்.