கடந்த சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இந்தியா எந்த ஒரு நாட்டுக்கும் சாதகமாக செயல்படாமல் உள்ளது. ஏன் எந்த ஒரு நாட்டிற்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்… ஏனென்றால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நல்ல நட்புறவு உள்ளது. அது ஒரு காரணமாக இருந்தாலும் மறுபுறம் 1971 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு கீழே இருந்ததால், இந்தியாவையும் எப்படியாவது தங்களுக்கு கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து தங்களது போர் கப்பல்களையும் வீரர்களையும் கொண்டுவந்து இந்திய எல்லையில் நிறுத்தினர்.
அவ்வளவு வீரர்கள் ஆதரவாக இருந்தும் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவம் ஆக இருந்தாலும், இரண்டாவது காரணம் ரஷ்யா. இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா தனது போர் கப்பல்களை எடுத்துவந்து சண்டை போட ஆரம்பித்தனர். இதுவே அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம். அந்த நட்புறவு காரணமாகவே இந்தியா நடு நிலைத்து நிற்கிறது. அதனால்தான் இந்தியா எந்த ஒரு நாட்டுக்கும் ஆதரவு செலுத்தாமல் இருக்கின்றது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் எந்த நன்றியால் ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான பந்தம் நீடித்துக் கொண்டிருக்கிறது என்று.