Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. கோடையில் அடுத்த ஆபத்து வரலாம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

கோடை காலத்தில் டெல்டா அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கொரானா  வைரஸ் தொடர்ந்து உரு மாற்றங்களை அடைந்து பரவி வருகிறது. இது தொடர்பாக உலக அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதுபற்றி “சயின்ஸ் ஆப் த டோட்டல் என்விரான்மென்ட்” என்ற பத்திரிகை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் முடிவு இந்த கோடைகாலத்தில் டெல்டா வைரஸ் அல்லது வேறு ஒரு உருமாறிய கொரோனா வரலாம் என்பதாகும்.

இதுபற்றி பேராசிரியர் ஏரியல் குஷ்மாரோ உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவை பொறுத்தமட்டில் நிறைய காரணிகள் இருக்கின்றன. எங்கள் மாதிரி, இன்னொரு டெல்டா அலை உருவாகலாம் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்று காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் ஆராய்ச்சியாளர்கள், புதிதாக ஒரு உருமாறிய வைரஸ் வருகிறபோது அது தனக்கு முந்தைய முன்னோடி வைரசை வீழ்த்தும் என்று தெரிவித்து வந்தனர்.ஆனால், இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முரணாக தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் அதிகரிக்கும்போது, டெல்டா மாறுபாடு குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிற இயக்கவியலுக்கு மாறாக, கழிவுநீர் கொண்டு நடத்திய ஆராய்ச்சியில் பெறப்பட்ட முடிவுகள், ஒமைக்ரான் அளவு அதிகரித்தாலும் கூட, டெல்டா வைரசின் ரகசிய சுழற்சி இருக்கும் என இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “எங்கள் மாதிரியின்படி, அகற்றப்படுகிற வரையில் ஒமைக்ரான் அளவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் டெல்டா வைரஸ் தன் ரகசிய சுழற்சியை பராமரிக்கும்” என தெரிவித்தனர். டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய வைரசாக கருதப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் இயக்கவியல் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டி இருக்கிறது என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |