Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில்… உலகிலேயே உயரமான வானிலை மையம்…. சீனா சாதனை…!!!

சீனா, பருவகால மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயு போன்றவற்றை ஆராயும் நோக்கத்தோடு எவரெஸ்ட் சிகரத்தில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது.

சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,830 மீட்டர் உயரத்திற்கு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. அந்த நிலையத்தில் தகவல் பரிமாற்றங்களை சோதித்து அதிலும் சீனா வெற்றியடைந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு இயங்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி வானிலை நிலையமானது சூரிய தகடுகள் மூலமாக தேவைப்படும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன.

இந்த நிலையம் கடும் பருவ கால நிலையிலும் இயங்கும் திறன் உடையது. மேலும் தகவல் பரிமாற்றத்திற்கு செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சாதனத்தையும் வைத்துள்ளனர். மேலும் இதில் 12 நிமிடங்களுக்கு ஒரு தடவை தகவல் பரிமாற்றம் நடத்தும் விதத்தில் செயல்பாட்டிற்கு ஏற்ப குறியீடுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சீன நாட்டின் விஞ்ஞானிகள் தலைமையில், சுமார் 270-க்கும் அதிகமான உறுப்பினர்களோடு 16 குழுக்கள் கடந்த மாதம் 28-ம் தேதியில் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி மலையேற்ற பயணத்தை தொடங்கினார்கள். ஆனால் கடைசியாக 13 நபர்கள் தான் மலை உச்சியை அடைந்தார்கள். மேலும் எவரெஸ்ட்டின் உயரமான பகுதியில் பருவ கால மாற்றத்தையும் பசுமை இல்ல வாயுக்களின் மாறுபட்ட தன்மையையும் ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |