30 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.
கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகின்றது.உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றுள்ளார்.
அப்போது அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்பின் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று டென்மார்க் சென்றுள்ளார். டென்மார்க்கில் நடக்கும் இரண்டாவது இந்தியா – நார்டிக் மாநாட்டில் பங்கேற்று கொண்டார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன் டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றனர்.
மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த நிலையில் பிரதமர் மோடி ஜெர்மனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் 1993 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்து விட்டு திரும்பிய போது ஜெர்மனியின் பிராங்க்பேர்ட்டில் தங்கியிருந்த போது எடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.