பிரபல நிறுவனம் Netflix சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
பிரபல ஏர்டெல் நிறுவனம் Netflix சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இது ஏர்டெல் ப்ரொபஷனல் மற்றும் இன்பினிடி திட்டங்களுடன் வழங்கப்படுகிறது. இதனையடுத்து மாதம் 1498 ரூபாய் கொண்ட Airtel professional பிளானிற்கு மாறுபவர்களுக்கு Netflix இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிடெட் டேட்டா 300Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி அமேசான் பிரைம் வீடியோ, Disney plus hotstar, extreme premium போன்றவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. Airtel infinity கட்டணம் 3,999 ரூபாய் ஆகும். இதனுடன் Netflix பிரீமியம் கட்டணம் 649 ரூபாய் ஆகும். இந்த பிளானில் அன்லிமிடெட் டேட்டா 1gbps வேகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த பிளானுடன் அமேசான் பிரைம் வீடியோ, Disney plus hotstar, extreme premium போன்றவைகளும் வழங்கப்படுகிறது.