Categories
பல்சுவை

கார் வாங்கப் போறீங்களா?….. குறைந்த வட்டியில் லோன்…. எந்த வங்கியில் தெரியுமா?….!!!!

பல வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்து வரும் நிலையில் பேங்க் ஆப் பரோடா வட்டியை குறைத்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. நீங்கள் கார் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும். கார் நிறுவனங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பாங்க் ஆப் பரோடா கடனுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. கார் வாங்கும் நோக்கம் இருப்பவர்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியை பயன்படுத்தி காருக்காக கடனை பெற்றுக்கொள்ளலாம். அதன்படி பேங்க் ஆப் பரோடா வட்டி விகிதத்தை 7 சதவீதமாக குறைத்துள்ளது.

பல வங்கிகள் தங்களது வங்கி கடனுக்கான வட்டியை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி கடனுக்கு 7.5 சதவீத வருடாந்திர வட்டி வசூல் செய்கின்றது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களிடம் இருந்து 1500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செயலாக்க கட்டணம் வசூல் செய்யப்படும். இந்த சலுகை ஜூன் 30, 2022 வரை மட்டுமே இருக்கும். புதிய கார் வாங்கினால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செகனண்ட் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் வீட்டு கடனுக்கான 6.75ல் இருந்து 6.50 சதவீதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |