நடராஜர் நடனத்தை இழிவுபடுத்தி பேசியதாக ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் இருந்தது என்று நீங்க எல்லாரும் சொல்லுகிறீர்கள், மனுநீதி அது எப்பவோ ஆங்கிலேயன் எழுதின புத்தகம் மனுநீதி.
அதை இப்ப வந்து தடைசெய்யவேண்டும், பண்ணனும் என்று சொல்வதெல்லாம் ஒருபக்கம். இது வேண்டுமென்றே யூடியூப் வடிவத்தில் இப்போ இதனுடைய தேவை என்ன ? எனக்கு என்னவோ இது ஒரு தந்திரமாகத் இருக்கிறது, இப்போ எங்கே பார்த்தாலும் மின்சார பற்றாக்குறை, கரண்ட் கட், விலைவாசி உயர்வு, குடிதண்ணீர் பற்றாக்குறை,
கோடைகாலம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதிலிருந்தெல்லாம் திசை திருப்புவதற்காக இது போன்ற விஷயங்களை பேசி இப்படி செய்திருக்கிறார்களோ என எனக்கு தெரியவில்லை. அதனால் உடனடியாக இந்த விஷயத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.