Categories
அரசியல்

EMI செலுத்துவோருக்கு ஷாக் நியூஸ்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. யாருக்கெல்லாம் பாதிப்பு தெரியுமா?….!!!!

தனியார் வங்கியான யெஸ் பேங்க் தனது அனைத்து காலவரம்புகளுக்கும் MCLR வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதனால் விரைவில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான ஈஎம்ஐ தொகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு வங்கிகள் விதிக்கும் அடிப்படை வட்டி விகிதம். அந்த அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை உயரும். இந்நிலையில்யெஸ் பேங்க் தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.10% முதல் 0.15% வரை உயர்த்தியுள்ளது.

அதன்படி அனைத்து காலங்களிலும் கடன்களுக்கு அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனம் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வாங்கியோர் EMI உயர்வை விரைவில் சந்திக்க நேரிடும். மேலும் புதிதாக கடன் வாங்குவோர் மட்டுமல்லாமல் ஏற்கனவே EMI செலுத்தி வருவோருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். சமீபகாலமாக பல்வேறு வங்கிகள் அடிப்படை வட்டியை உயர்த்தியுள்ளன.SBI, Bank of Baroda, Kotak Mahindra Bank, Axis Bank, HDFC Bank ஆகிய வங்கிகள் கடந்த சில வாரங்களில் அடிப்படை வட்டியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |