வங்கியில் குழந்தைகளுக்கு என கணக்கை திறக்க முடியுமா? அப்படி திறந்தால் அவர்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
பள்ளி செல்லும் காலத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வரை நாம் பெற்றோரிடம் பாக்கெட் மணியாக குறிப்பிட்ட தொகையை பெறுவது வழக்கம். அதனை சிறு குழந்தைகள் மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்கு பயன்படுத்துகின்றனர். கல்லூரி செல்லும் இளைஞர்கள் டீ காபி கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றை அருந்துவதற்கு பயன்படுத்துகின்றன. இப்படி பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கெட் மணியை சில குழந்தைகள் செலவு செய்யும், ஆனால் ஒருசில குழந்தைகள் அவர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் போட்டு சேமிக்கும். இது ஒரு புறமிருக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாக்கெட் மணியாக பணம் கேட்கும் போது அப்போது கையில் எவ்வளவு உள்ளதோ அதனை அப்படியே தூக்கி கொடுத்து விடுகிறார்கள். குழந்தை இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் சேமிப்பு தொடர்பான பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வங்கி கணக்கு:
கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விடும். இதனால் மற்ற வாடிக்கையாளர்களை போன்று அவர்களுக்கும் வங்கிகளில் சாதாரணமாக கணக்கை திறந்து கொள்ளலாம். ஆனால் 18 வயது பூர்த்தி அடையாத இளம் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு திறப்பதில் சில நிபந்தனைகள் உள்ளது. அவர்களுக்கு மாணவர் கணக்கு என்ற பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு வங்கி அனுமதி வழங்குகின்றது. ஆனால் இதில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சேவைகளும் கிடைக்காது. அதாவது இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியில் பணம் எடுக்கலாம், போடலாம், ஆனால் மூன்றாம் நபர்களுக்கான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. ஆனால் இளம் வயதிலேயே வங்கிக் கணக்கை தொடங்குவது அவர்களுக்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க உதவியாக இருக்கும்.