Categories
சினிமா

அடடே….! நம்ம தர்ஷா வா இது…. இஸ்லாமிய பெண்ணாக மாறி…. ரசிகர்களுக்கு வாழ்த்து….!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகை தர்ஷா குப்தா தனது இணையதள பக்கத்தில் வாழ்த்து  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார்.

மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இதற்கிடையில் நேற்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை  கொண்டாடபட்டதையடுத்து சினிமா துறையினர், அரசியல்வாதிகள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தர்ஷா குப்தா ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது இணையதள பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில் “வலிகள் தேய்பிறையாய் தேயட்டும். வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும். அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்” எது பதிவிட்டிருந்தார்.

இதுமட்டுமின்றி தர்ஷா குப்தா முஸ்லிம் பெண் போலவே சுடிதார் அணிந்து  புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல கைகளை குவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ரம்ஜான் அதுவுமா கையில் பிரியாணி தட்டுடன் ஒரு போட்டோஷூட் நடத்தி போட்டோ போட்டு இருந்து இருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும் என்று கிண்டல் செய்தும். மேலும் எங்களுக்கு எல்லாம் இன்னைக்கு பிரியாணி ட்ரீட் இல்லையா என்றும் நக்கல் செய்து வருகின்றனர்.

Categories

Tech |