Categories
உலக செய்திகள்

“விவாகரத்தான தம்பதியினர்”…. மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் கணவர்…. நடக்கப்போவது என்ன?….!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தம்பதி தங்களின் 30 வருடகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக சென்ற ஆண்டு மேமாதம் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்த தம்பதியினருக்கு ஜென்னர், ரோரி மற்றும் போபே ஆகிய 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் விவகாரத்து செய்து கொண்ட போதிலும் இருவரும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளைக்காக தொடர்ந்து ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பில்கேட்ஸ் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியின்போது ” தனது மனைவியை மீண்டுமாக கல்யாணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக” தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது “சென்ற 2 வருடங்கள் மிகவும் முக்கியமான கால கட்டமாகிபோனது.

ஏனெனில் கொரோனா பெருந்தொற்றுதான் காரணம். தனக்கு இது வித்தியாசமான காலம், சிலவற்றை உணர்த்திய காலம் ஆகும். குழந்தைகள் வளர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிய பின் ஒவ்வொரு திருமணமும் மாற்றத்தை நோக்கி செல்கிறது. விவாகரத்து ஆனாலும்கூட எங்களது திருமணமானது சிறந்த திருமணம் ஆகும். நாங்கள் ஒன்றாக சேர்ந்து அறக்கட்டளையை உருவாக்கினோம். முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணிபுரிவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எங்களது அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற இருகிறது. இது மெலிண்டா மற்றும் நான் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டம் ஆவாகும். என் மனைவியுடன் இன்னும் நட்புடன் உள்ளதாக நம்புகிறேன். அவருடன் எனக்கு மிகமுக்கியமான, நெருக்கமான அதே சமயம் சிக்கலான உறவும் இருந்தது.

எனினும் நாங்கள் ஒன்றாக வேலைசெய்ய முடிவு செய்தோம். எங்களது திருமணமானது எதற்காக முடிவுக்கு வந்தது என்பதைப் ஆராய்வது வீணான ஒன்றாகும். இதனால் விவாகரத்தின் தாக்கத்தில் இருந்து இரண்டு பேரும் மீண்டு வருகிறோம். இதனிடையில் நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஆனால் நான் மெலிண்டாவை மீண்டுமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் எதிர்காலத்தைப் பொறுத்தவரையிலும் என்னிடம் எத்திட்டமும் கிடையாது. மெலிண்டா தன்னை மீண்டுமாக திருமணம் செய்துகொள்வாரா என்பது எனக்குத்தெரியாது” என்று பில்கேட்ஸ் தெரிவித்தார்.

Categories

Tech |