Categories
சினிமா

80-களில் முன்னணி நடிகரின்…. நடிப்பில் உருவாகும்…. ஹரா படத்தின் சுவரசியமான அப்டேட்….!!!!

நடிகர் மோகன் பிறந்தநாளையொட்டி ஹரா படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளது. 

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த மைக் மோகன், நீண்ட இடைவெளிக்கு பின்,  மீண்டும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.எனேவ அவரது பிறந்தநாளில் ‘ஹரா’ படக்குழு புதிய அப்டேட்டை வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ‘ஹரா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தை ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார்.மேலும் இப்படம்  முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது.  இதையடுத்து இப்படத்தை எஸ்.பி.மோகன்ராஜ்   தயாரித்து வருகிறார். மேலும்  இந்தப் படத்தில் நடிகை குஷ்பு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து இப்படம் ஐபிசி சட்ட விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகிறது. அதோடு குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் என்றால் என்ன என்பது குறித்தும் படத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த மோகனை ஆகஷன் ஹீரோவாக இப்படத்தின் மூலம் பார்க்கலாம். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்  மோகன் பிறந்தநாளையொட்டி வருகிற மே 10 அன்று  ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |