இன்றைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையாக வீடு கட்டுதல், கார் வாங்குதல் மற்றும் தொழில் தொடங்குதல் போன்றவைகள் உள்ளது. இந்த தேவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் வங்கிகளையே அணுகுகின்றனர். அதாவது வங்கியில் வீட்டுக் கடன் மற்றும் தொழில் தொடங்குவதற்கான கடன், கார் வாங்குவதற்கு கடன் வாங்குகின்றனர். அதன்பிறகு EMI மூலமாக மாதந்தோறும் வங்கிகளுக்கு கடனை திருப்பி செலுத்துகின்றனர். இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த வங்கி தற்போது ஒரு வருடத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வசூலிக்கிறது.
இந்நிலையில் வட்டி குறைக்கப்பட்டதுடன், செயலாக்க கட்டணமும் குறைக்கப்பட்டதாக வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் கார் வங்கியவர்களிடம் இருந்து 1,500 ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். இந்தத் தள்ளுபடி ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த தள்ளுபடி புதிதாக கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவர் கார் வாங்குவதற்கு ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கி இருந்தால் அதற்கு மாதம் தோறும் 15,215 EMI செலுத்த வேண்டும். ஆனால் தற்போது வட்டி கடன் குறைக்கப்பட்டதால் மாதம்தோறும் 15,093 EMI செலுத்தினால் போதும். மேலும் வீட்டு கடன் வட்டி 6.75 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.