Categories
மாநில செய்திகள்

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஆள் மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை…. திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவரும் அனைத்து பாடங்களையும் படித்து பொதுத் தேர்வுக்கு தயாராக வேண் டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கான பாடத்திட்ட விவரங்கள் அனைத்தும் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் அடுத்த தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. காப்பி அடித்து தேர்வு எழுதினால் போராட்டத்துக்கு தடை. காப்பி அடித்த தேர்வு ரத்து செய்யப்படும். தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் செல்போன் எடுத்து வர தடை.மேலும் முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை போனால் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |