Categories
தேசிய செய்திகள்

ஓடும் இரயில் முன் பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி… 2 மாணவிகளின் விபரீத ஆசை… ஒருவர் உடல்சிதறி பலியான சோகம்..!!

இந்த நிலையில் அவர்களில் சுமார் நூறு பேர் நேற்று ஓடுலாபரி என்ற நகரில் உள்ள ஒரு நதிக்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு நிறைய மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது 2 மாணவிகள் மட்டும் தனியாக அந்த பகுதியிலுள்ள இரயில் பாலத்துக்கு சென்றனர். அங்கே இருவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திடீரென அவர்களுக்கு விபரீத ஆசை ஓன்று தோன்றியது. அதாவது பாலத்தில் தொங்கியபடி ரெயில் வரும்போது செல்பி எடுக்க வேண்டும் என்பதே  அவர்களின் ஆசை.

இருவரும் செல்பி எடுக்க தயாராகி கொண்டிருந்த சமயத்தில் சிலிகுரி நகரில் இருந்து அலிப்பூர்தூர் நகருக்கு பயணிகள் இரயில் ஒன்று அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது பாலத்தில் நின்று  கொண்டிருந்த 2 மாணவிகளும் அந்த ரெயில் முன் தொங்கியபடி படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில்  ‘செல்பி’ எடுக்க முயற்சி செய்தனர்.

செல்பி எடுக்க தயார்நிலையில் செல்போனை வைத்து கொண்டிருக்க, இரயில் அருகே வந்தபோது திடீரென சுழன்று அடித்த காற்றின் வேகத்தில் ஒரு மாணவி சற்று நகர்ந்து உள்ளே சென்று விட, வேகமாக வந்த இரயில் அவர் மீது மோதியது. சற்று தூரம் இழுத்து செல்லப்பட்ட அந்த மாணவியின் உடல் சிதைந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக மற்றொரு மாணவி இரயில் அருகில் வந்ததும் பயந்து போய் அலறியபடி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டார். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

மாணவிகளின் அலறல் சத்தத்தை கேட்டு நதிக்கரை ஓரம் அமர்ந்திருந்த அவர்களது தோழிகள் மற்றும் பிற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பாலம் பகுதிக்கு ஓடி வந்து பார்த்தபோது ஒரு மாணவி பலியானதும், மற்றொரு மாணவி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |