மிகவும் ஆபத்தான சாதனைகளை செய்யும் David Blaine பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் மூன்று நாட்கள் ஐஸ் கட்டியிலிருந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். தண்ணீருக்கு அடியில் மூச்சை அடக்கி புதிய சாதனையைப் படைத்தார். பார்வையாளர்களுக்கு முன்பாக ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டியில் வியக்கத்தக்க சாதனையை புரிந்தார். அவர் ஐஸ் பெட்டியில் இருக்கும் போது ஒரு ட்யூப் வழியாக தண்ணீர் மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் உணவு எதுவும் அருந்தாமல் சாதனை புரிந்தார். அவரின் உடல் முழுவதும் விறுத்துப் போய்விட்டது.
அவர் தனது கண்களை மூடினால் சாதனை புரிய முடியாது என்ற எண்ணத்தில் அப்படியே இருந்துள்ளார். இதை செய்து கொண்டிருக்கும்போது 61 மணி நேரத்தில் தனது சுயநினைவை இழந்தார். இருந்தாலும் எப்படியாவது சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் 63 மணி நேரத்திற்கு பிறகு அவரை வெளியே எடுத்தனர். வெளியே வந்த அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை, உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு ஒரு மாதத்தில் குணமடைந்த அவர் மிகவும் ஆபத்தான சாதனைகளை மீண்டும் செய்ய தொடங்கினார்.