Categories
தேசிய செய்திகள்

இவரை பாராட்டியே ஆகணும்…. “சாதாரண குப்பை இன்று வீட்டில் மணக்குது”…. கோடிக்கணக்கில் வியாபாரம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சுய தொழில் செய்ய தொடங்கிவிட்டனர். அதில் சிலர் செய்யக்கூடிய தொழில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு சுய தொழிலை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக கோவில்களில் சாமிக்கு போடப்படும் பூக்கள் மறுநாள் குப்பையில் வீசப்படும். அப்படி தினந்தோறும் ஏராளமான பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. அந்தப் பூக்களை வீணடிக்காமல் அதை ஒரு தொழிலாக செய்துவருகிறார் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த அங்கித் அகர்வால்.

அவருக்கு சுற்றுச்சூழல் மீது மிகவும் ஆர்வம் உள்ளது. ஒரு நாள் கங்கை கரை ஓரமாக தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தினமும் ஏராளமான குப்பைகள் கொட்டப்படும் பார்த்துள்ளார். கான்பூரில் உள்ளகோவில்கள் மற்றும் மசூதிகளில் இருந்து மட்டும் வருடத்திற்கு பல லட்சம் டன் பூக்களை கங்கையில் கொட்டுவது வழக்கம். அந்தப் பூக்களை நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கித் அகர்வால் சிந்தித்துள்ளார். பலவித யோசனைகளுக்கு பிறகு ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கலாம் என சிந்தித்தார்.

பொதுவாக ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி நிலக்கரி துண்டில் தான் தயாரிக்கப்படுகிறது. விரும்பி வடிவம் செய்து அதை நறுமண திரவியத்தில் முக்கி எடுத்து காய வைத்தால் ஊதுபத்தி சாம்பிராணி தயாராகும். ஆனால் இங்கு நிலக்கரிக்கு பதில் பூவை பயன்படுத்த தொடங்கினர். குப்பையில் கொட்டப்படும் பூக்களை எடுத்து அதனை சுத்தப்படுத்தி, நன்றாக காயவைத்து, அதிலிருந்து இதழ்களை பிரித்து பூக்கள் உற்பத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கப்படுகிறது.

அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர் குப்பையிலிருந்து செய்யத் தொடங்கிய இந்த தொழில் தற்போது அனைவரது வீட்டிலும் மணந்து கொண்டு இருக்கிறது. இந்த சுய தொழில் மூலமாக ஊரில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது. இப்படிப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்டு இவரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

Categories

Tech |