தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பர்மாவில் இருந்து கொடிமரம் வந்துள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிதாக கொடிமரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கொடி மரமானது பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த கொடிமரமானது செம்பட்டை அடிக்கப்பட்டு, இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பூஜை நடத்தபட்டது. பின்னர் கொடிமரத்தை நிலைநிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்ட பிறகு விக்னேஸ்வர பூஜை நடக்க இருக்கின்றது.
பிப்ரவரி 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளாக குடமுழுக்கு பூஜை நடைபெற உள்ளது.