Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு”… நடைபெற்ற சைக்கிள் பேரணி…!!!!

பூண்டி அணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக பூண்டி அணை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியானது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கபேட்டை வரை நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணிக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

இதையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கபேட்டை வரை பத்து கிலோமீட்டர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த பேரணியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவக்குமார், பூண்டி நீர்த்தேக்கம் உதவி பொறியாளர் ரமேஷ், திருவள்ளூர் சைக்கிள் கிளப் நிர்வாகிகள் லோகேஷ், ராகுல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |