தனியார் வங்கியான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை தற்போது மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகைக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகையில் 4% வட்டி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஐந்து கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகைக்கு 6 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதங்கள்:
1 லட்சம் ரூபாய் வரை இருப்பு தொகை – 4%
1 லட்சம் – 10 லட்சம் ரூபாய் வரை இருப்பு தொகை – 4%
10 லட்சம் – 5 கோடி ரூபாய் வரை இருப்பு தொகை – 6%
5 கோடி – 100 கோடி ரூபாய் வரை இருப்பு தொகை – 5%
100 கோடி – 200 கோடி ரூபாய் வரை இருப்பு தொகை – 4.50%
200 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு தொகை – 3.50%
வட்டி விகிதம் தினசரி பேலன்ஸ் தொகைக்கு கணக்கிடப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்