காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலுள்ள ஒரு நைட் கிளப்பில் நடந்ததாக கூறப்படும் இந்நிகழ்ச்சியில் ராகுல்காந்தி நிற்பதும், அவரை சுற்றியுள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியானது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில்தான் ராகுல்காந்தி ஒரு நைட் கிளப்பில் பங்கேற்றிருக்கும் வீடியோவானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. மேலும் நேபாளத்தில் ராகுல்காந்தி தன் நண்பரின் திருமணம் சுபநிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தியை கடுமையாக சாடியுள்ள மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, “முழுநேர சுற்றுலாப்பயணி பகுதி நேர அரசியல்வாதி மற்றும் “பாசாங்குத்தனம் நிறைந்தவர்”.
பயணம் முடிந்து நேரம் கிடைக்கும்போது போலி கதைகளையும் குற்றச் சாட்டுகளையும் உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்” என சாட்டியுள்ளார். அதன்பின் முக்தர் அப்பாஸ்நக்வி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “ராகுல்காந்தியின் கருத்துக்களானது நாட்டுமக்களை மட்டுமின்றி, அவரது கட்சியினரையும் தவறாக வழி நடத்துகிறது” என்று பேசினார். இது பற்றி விளக்கமளித்துள்ள காங்கிரஸ் கட்சியானது, ராகுல்காந்தி அவருடைய நண்பரின் திருமண சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வது நம் கலாசாரங்களில் ஒன்று ஆகும். திருமண நிகழ்ச்சியில்பங்கேற்பதால் நம் நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளது.