Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக வலையில் சிக்கமாட்டார் ரஜினி – கே.எஸ்.அழகிரி

பாரதிய ஜனதா கட்சி விரித்திருக்கும் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார்

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு துக்ளக் தர்பாரை மிஞ்சி விட்டதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது துக்ளக் தர்பார் தலை நகரத்தை மாற்றியது ஆனால் இவர்கள் ஒரு மனிதனுடைய குடியுரிமை மாற்ற நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு எனவும் அவர் கூறினார்.

மேலும் ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் பாஜகவின் வலையில் ரஜினி சிக்கமாட்டார் என்று தெரிவித்தார்.

ரஜினி குறித்து அவர் கூறியிருப்பதாவது ரஜினி பாரதிய ஜனதாவின் வலையில் சிக்குவார்  என்று நான் கருதவில்லை. அந்த தூண்டில் பக்கம் செல்வார், ஆனால் சிக்காமல் திரும்பி விடுவார் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குலக்கல்வி முறையை ஊக்குவிப்பது என்று கே எஸ் அழகிரி சாடினார். பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அதிமுக அரசு இதனை ஏற்றுக்கொண்டது தவறு என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |