லேண்ட் ரோவர் கார் நிறுவனம் தங்களுடைய காரின் திறன் எவ்வளவு என்று காண்பிப்பதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் தங்களுடைய நிறுவனத்தின் காரை ஒன்றை ரயில் தண்டவாளத்தில் இறக்கி விடுகிறார்கள். அந்த காருக்கு பின்புறம் மூன்று பெட்டிகளை கொண்ட ரயிலை இணைத்து விடுகிறார்கள். அந்த ரயில் பெட்டிகளில் சுமார் நூறு டன் எடை கொண்ட பொருட்களும் இருந்துள்ளது.
இதனையடுத்து ரயிலுடன் இணைக்கப்பட்ட லேண்ட்ரோவர் கார் சுலபமாக ரயிலை இழுக்க ஆரம்பித்துள்ளது. அதன்பின் அந்த கார் வேகமாக ரயிலை இழுத்து கொண்டு செல்ல தொடங்கியது. இந்த விளம்பரத்தைப் பார்த்த பின்னர் தான் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தின் லாபம் 5 மடங்கு உயர்ந்துள்ளது.