Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் ஷேன் நிகமால்கக்கு பதிலாக நடிகர் விஸ்வா!….

ஒலிம்பியா மூவிஸ்  நிறுவனம்  தயாரிப்பில்  சீனு ராமசாமி என்ற புதிய படத்திலிருந்து சர்ச்சைக் குரிய நடிகர் ஷேன் நிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன.

இந்த படத்தின் வரவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள படங்களில் பிரபலமாகி வரும் நடிகரான ஷேன் நிகம் நடிப்பதாக இருந்தது.

மலையாள திரையுலகில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . பின்னர் அங்குள்ள நடிகர் சங்கம் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது. மேலும் அவர் இரண்டு மலையாள படங்களில் நடித்த பிறகு தான் வேறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் ஷேன் நிகமால் சீனு ராமசாமியின் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் சீனு ராமசாமியின் படத்திலிருந்து ஷேன் நிகம் நீக்கப்பட்டுள்ளார். ஷேன் நிகமால்க்கு பதிலாக சாம்பியன் படத்தில் நடித்த விஸ்வா நடிப்பார் என கூறப்படுகிறது.

Categories

Tech |