Categories
உலக செய்திகள்

வாடிகன்: ஜப்பான் பிரதமர்- போப் பிரான்சிஸ் நாளை சந்திப்பு…. வெளியான தகவல்….!!!!!

ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்ற வெள்ளிக்கிழமை துவங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். இதையடுத்து இத்தாலி நாட்டிற்கு கிஷிடா இன்று போகிறார். அதன்பின் அவர் இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல இருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் சீனா போன்றவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடாவின் இப்பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தின் ஒருபகுதியாக ஜப்பான் நாட்டின் பிரதமர் வாடிகனில் நாளை போப் பிரான்சிஸை சந்தித்து பேச இருகிறார்.

இதனை ஜப்பானிலிருந்து வெளியாகும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே கடந்த 2014ஆம் வருடம் வாடிகனுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 8 வருடங்களுக்கு பின் முதன் முறையாக வாடிகனுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இச்சந்திப்பில் அணு ஆயுதங்கள் அற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |