Categories
அரசியல்

வன்னியர் இட ஒதுக்கீடு… தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க… அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி,” இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது இதுவே போதுமானது . 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் போதும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். கன்னியாகுமரி, தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்ட மக்களும் பாமகவை விரும்புகின்றனர்.

ஏனெனில் தகுதி, செயல் திட்டம் என அனைத்தும் பாமகவிடம் உள்ளது. இந்தியாவிலேயே கடந்த 20 ஆண்டுகளாக நிழல்நிதி அறிக்கை வெளியிடும் கட்சி பாமக தான்.இந்நிலையில் புதிய யுக்திகள், புதிய வியூகங்கள் என இனி ‘பா.ம.க2.0’ என்ற  அரசியல் செய்யப் போவதாக அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தல் கோட்டையில் கொடியேற்றி, 5 ஆண்டுகள் ஆட்சி கிடைத்தால் சொடக்கு போட்டு தமிழகத்தை முன்னேற்ற விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |