போக்குவரத்து போலீஸ்காரர் ரோட்டின் நடுவில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களை வாரி சாலை ஓரம் கொண்டு போட்டு சரி செய்தார்.
சென்னை, மதுரவாயல் சிக்னல் அருகில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அப்போது லாரியில் இருந்த கொஞ்சம் ஜல்லி கற்கள் ரோட்டின் நடுவில் கொட்டியது. இதைப் பார்த்தும் பார்க்காமல் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களின் மீது வண்டிகளை ஏற்றி இறக்கி சென்றுள்ளார்கள்.
இதனையடுத்து சிதறி கிடக்கும் ஜல்லி கற்களினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி அந்த சிக்னலில் பணியிலிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்திகேயன் அருகில் இருந்தவர்களிடம் இருந்து மண்வெட்டியை வாங்கினார். அதன்பின் ரோட்டின் நடுவில் கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை வாரி சாலை ஓரம் கொண்டு போட்டு சரி செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து போலீஸ்காரர் செய்ததை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாராட்டினார்கள்.