Categories
பல்சுவை

“RED BULL ENERGY DRINK” முதன் முதலில் எப்படி விளம்பரம் செய்தார்கள் தெரியுமா?…. பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க….!!

பிரபலமான நிறுவனம் தன்னுடைய எனர்ஜி ட்ரிங்க்கை விற்பனை செய்வதற்காக செய்த விளம்பரம் குறித்த சில தகவல்களை இதில் பார்க்கலாம்.

கடந்த 1994-ஆம் ஆண்டு Red Bull எனர்ஜி ட்ரிங்க் முதன் முறையாக லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது கோகோ கோலா, பெப்சி போன்றவைகள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. இதனால் red bull எனர்ஜி ட்ரிங்கை மக்களிடையே எப்படி பிரபலமாக்குவது என நிறுவனம் யோசித்தது. ஆனால் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் அளவிற்கு போதிய பணம் இல்லை.

இதன் காரணமாக லண்டனில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைத் தொட்டிகளில் red bull எனர்ஜி ட்ரிங்க் இன் காலி பாட்டில்களை நிரப்பி வைத்தனர். இதை பார்த்த அனைத்து மக்களும் அனைவரும் red bull எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்திருக்கிறார்கள் நாம் மட்டும் தான் குடிக்கவில்லை என நினைத்து இருக்கிறார்கள். இதனால் அனைவரும் ஆர்வத்துடன் சென்று Red Bull எனர்ஜி ட்ரிங்கை வாங்கி இருக்கிறார்கள். இதனால் ஒரே நாளில் red bull ட்ரிங்க் மக்களிடையே மிகவும் பிரபலமானது. மேலும் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

Categories

Tech |