Categories
பல்சுவை

இப்படி நடந்தால்….. மூட்டு வலி வருமா?… மருத்துவர் சொன்ன விளக்கம்….!!

மூட்டு வலி வருவதற்கான காரணம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

பொதுவாக மூட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், சூடான உணர்வு, மூட்டு சிவந்து காணப்படுவது, நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் இருமல், அதிகப்படியான வியர்வை, காய்ச்சல், உடல் குளிர்ச்சியாக இருத்தல், ஒரு வாரத்திற்கு மேல் தீராத மூட்டு வலி, படிக்கட்டுகளில் ஏறும் போது சிரமப்படுதல் போன்றவை மூட்டு வலிக்கு அறிகுறியாக கருதப்படுகிறது. இதற்கு மருத்துவரை அணுகி கட்டாயமாக சிகிச்சை பெற வேண்டும். நாம் நடக்கும் போது சிலவற்றை கவனிக்க வேண்டும். நாம் ஒழுங்காக நடக்காவிட்டால் கூட மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது நாம் நடக்கும் போது நம்முடைய கால்களை நேராக வைத்து நடக்கிறோமா  இல்லையெனில் சாய்வாக வைத்து நடக்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நாம் நடக்கும் போது கால்களை சாய்வாக வைத்து நடந்தால் மூட்டுத் தேய்மானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நாம் சாதாரணமாக நேராக நடக்கும் போது கால்கள் சாய்வாக போவது இயல்புதான். ஆனால் நடக்கும் போது கால்கள் 7 டிகிரி வரை சாய்வாக இருந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது. அதற்கு மேல் சாய்வாக நடந்தால் கண்டிப்பாக மூட்டு தேய்மானம்  வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  இந்த தகவல் royal multi care  என்ற you tube சேனலில் இருக்கிறது.

Categories

Tech |