Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 4 முதல் 28 வரை…… அனல் பறக்க போகுது…. மக்களே வெளியே செல்லாதீங்க….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக மே 24ஆம் தேதி அனல் கலந்த வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.

இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவில் புழுக்கம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் பகல் நேரத்தில் அத்தியாவசிய காரணங்கள் இன்றி தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |