பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நேற்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கொள்கைகளை எதிர்க்கும் வகையில் கருப்பு ஆடை அணிந்து கொண்டு நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மே தினமான நேற்று போராட்டங்கள் நடந்திருக்கிறது. அப்போது அவர்கள் வணிகக்கட்டிடங்களில் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பதிலுக்கு போராட்டக்காரர்களும் காவல்துறையினர் மீது பொருட்களையும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் மோதல் வெடித்தது. நாடு முழுக்க பல இடங்களில் 250 ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நேற்று மட்டும் நடந்திருக்கின்றன.