கோடைகாலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று மே தினத்தை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் போன்ற அருவிகளில் தங்களது குடும்பத்துடன் குளித்தனர். இதனையடுத்து முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர்.
இதனால் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வருவல் கடைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது . இதனையடுத்து மணல் திட்டு, மெயின் அருவி, சரி துறை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.