ஜூனியர் என்டிஆர் படத்தில் ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகின்றார்.2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
மேலும் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய படத்தில் ராஷ்மிகா நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனரான கொராட்டாலா சிவா ஆச்சார்யா படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்க இருக்கின்றார்.
இந்த நிலையில் இந்த படத்தை பற்றி பேசிய கொராட்டாலா சிவா இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்க இருக்கின்றேன். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை ராஷ்மிகா மற்றும் பூஜா இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.இருப்பினும் இப்படத்தில் ஜூனியர் NTR ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவித்தார். மிகப்பெரிய பொருட்ச்செலவில் PAN INDIA படமாக உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா நடிக்கவிருப்பது பூஜா ஹெக்டேவிற்கு சற்று கடுப்பை ஏற்படுத்தியிருக்கும் என சில ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.