நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது அஜித் வலிமை படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள AK 61 படத்தில் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் அஜித்.
மேலும் இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருவதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் AK 61 படத்திற்கு பின் அஜீத் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 படத்தில் நடிகை இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி ஆண்டில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அஜித்தை பற்றி பேசியிருக்கிறார்.
அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி மற்றும் மங்காத்தா திரைப்படம் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று எனவும் மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சி வேற லெவலில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் இயக்க இருக்கும் AK 62 படத்திலும் அஜித்தை இதுபோல மாஸாக காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.