ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- செங்கல்பட்டு, சூலூர்பேட்டை, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.