Categories
பல்சுவை

“அந்த செஸ் போர்டை அன்னைக்கே திறந்து பார்த்திருக்கலாம்”…. நெப்போலியன் பற்றி ஒரு சுவாரசியமான கதை….!!!!

உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கைப்பற்றி தானே ஆள வேண்டும் என்று ஆசை கொண்டவர் நெப்போலியன். மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக நெப்போலியன் கருதப்படுகிறார்.  இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான கதையை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இவர் பிரிட்டனிடம் தோற்று ஜெயிலில் இருந்தபோது அவரின் நண்பர் ஒருவர் அவரை பார்க்க வந்துள்ளார். அவர் நெப்போலியனிடம் பேசி முடித்துவிட்டு கடைசியாக செஸ் போர்டு ஒன்றை கொடுத்துவிட்டு செல்கிறார். இதை வைத்து நீங்கள் விளையாடுங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

ஆனால் நெப்போலியன் பிரிட்டனிடம் தோற்று ஜெயிலில் உள்ளமே என்று மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததால் அந்த செஸ் போர்டு திறந்து பார்க்கவே இல்லை. அவர் இறந்த பிறகு பிரிட்டிஷ் அரசு நெப்போலியன் பயன்படுத்திய செஸ் போர்டு என்று கூறி அதனை ஏலத்தில் விடுகிறார்கள். ஏலத்திற்கு விடுவதற்கு முன்னால் அந்த செஸ் போர்டை அவர்கள் திறந்து பார்த்துள்ளனர். அதை பார்த்து அனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த செஸ் போர்டில் அந்த ஜெயிலில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதற்கான குறிப்பும், ஒரு சாவியும் இருந்துள்ளது. அன்றே நெப்போலியன் அந்த செஸ் போர்டை திறந்து பார்த்திருந்தால் அவர் ஜெயிலில் இருந்து தப்பித்து இருந்திருப்பார்.

Categories

Tech |