Categories
உலக செய்திகள்

துருக்கி பூகம்பத்தில் இறப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்வு  1,607 பேர் மருத்துவமனையில் அனுமதி

கிழக்கு துருக்கியில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 36 பேர் இறந்தனர் மற்றும் 1,607 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கிழக்கு எலாசிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகருக்கு அருகே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் குறைந்தது 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று உள்துறை அமைச்சர் சுலிமான் சோய்லு தெரிவித்தார்.

சுமார் 1,607 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை நிர்வாகத் தலைவர் (AFAD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து குறைந்தது 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 1,521 கட்டிடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, 76 கட்டிடம்  இடிந்து விழுந்ததாகவும் 645 பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் AFAD தெரிவித்துள்ளது.

பூகம்பத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர்  எலாசிக் மாகாணத்தின் மையப்பகுதில்  இருந்தவர்கள் ஆவர்.

இந்த நிலநடுக்கத்தால் எலாசிக் நகரில் ஐந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர் முராத் குரூம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பூகம்பம் 40 வினாடிகள் நீடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, 3,699 தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று AFAD தெரிவித்துள்ளது.

பூகம்பத்தைத் தொடர்ந்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தொடர்புடைய துறைகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு உள்துறை, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் அனுப்பப்பட்டனர்.

 

Categories

Tech |