Categories
தேசிய செய்திகள்

“ஆதாள பாதாளத்தில் கிடக்கும் இந்திய பொருளாதாரம்”….. மீளுவதற்கு 15 வருஷமாகுமாம்….. ரிசர்வ் வங்கி ஷாக்கிங் ரிப்போர்ட்….!!!

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2021-22 நிதி ஆண்டுக்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் மீள்வதற்கு இன்னும் 12 ஆண்டுகள் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான ஏழு சக்கரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த டிமாண்ட், மொத்த சப்ளை, நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் சந்தைகள், பொருளாதார சமநிலை மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, கட்டமைப்பு மாற்றங்கள், நிலைத்தன்மை ஆகிய பொருளாதார வளர்ச்சிக்கான 7 சக்கரங்களில் இந்தியா கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இந்தியா வலுவான நிலையான வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டுமெனில் விலைவாசி நிலையாக இருக்க வேண்டும். தற்போது, பொருட்களின் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 5 ஆண்டுகளில் அரசின் பொது கடன்களை ஜிடிபியில் 66 விழுக்காட்டுக்கு கீழே குறைக்க வேண்டியது நாட்டின் நடுத்தர கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டி அதன்பின் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டினாலும், கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட இழப்புகளை தாண்டி வருவதற்கு 2034 – 35 ஆம் ஆண்டு ஆகிவிடும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |