கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது.
இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூத்துக் குலுங்கும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, போன்ற பகுதிகளில் பார்த்து ரசித்து மகிழ்ந்துள்ளனர். இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறைகள் முன்பதிவு செய்யவேண்டும் என விடுதியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.