நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் சுமார் 252.34 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் நேற்றைய தினமே மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 52.78 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, கோவை , சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.