கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வா கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில் பராமரிக்கவில்லை. இதனால் கால்வாய் தூர்ந்து போய் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளின் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.